

Kanindha Vaazhvu - Dr.N.Badri
About The Product:
முதுமைக்கு மன்னிக்கவும் மறக்கவும் தெரியும். ஒரு சாதாரண உரையாடலே பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக இருந்த வெறுப்பைக் கரைத்துவிடும். அந்த வெறுப்பு அந்த மனிதரைப் பற்றியது அல்ல. அது நமது அகம்பாவம், மதிக்கப்படவில்லை என்ற பயம், பாதுகாப்பற்ற உணர்வு, அமைதியற்ற நிலையில் உருவான கற்பனை, உண்மை இல்லாத அளவுக்கு மீறிய சிந்தனை — இவற்றைப் பற்றியது ஆகும். இது சுமார் தொண்ணூறு சதவீத மக்களின் வாழ்வில் அன்றாடம் நிகழ்கிறது. மனிதர்களை வெறுப்பதற்குப் பதிலாக, மிகப் புத்திசாலித்தனமாக நமது மனத்தில் அவர்களைப் பற்றிய நேர்மறை உணர்வை அதிகரிக்க முயல வேண்டும். அவர்களுடன் நமக்கு நல்ல உறவு இருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ள வேண்டும். நமது மன அமைதிக்காக இதைச் செய்யும்போது, அவர் மீதான நமது வெறுப்பு மனத்தை விட்டு வெளியேறி விடுகிறது. அகம்பாவம் மறைந்து, பயம் குறைகிறது. அவரைப் பற்றிய கற்பனையும் நேர்மறையாக மாறி, நம் மனம் லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை நம்மாலும் நண்பராலும் உணர முடிகிறது. நம் மன அமைதிக்கு மற்ற மனிதர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நம் மனத்தில் அவர்களைப் பற்றிய அபிப்ராயங்களை மாற்றினாலே போதும். * இன்றைய முதியோர்களும், நாளைய முதியோர்களும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே என் விழைவு.
Product Details:
Legal Disclaimer : Product color may slightly vary due to photographic lighting sources or your monitor settings.
People Also Bought
Here’s some of our most similar products people are buying. Click to discover trending style.
Recently viewed products
The best quality products are waiting for you. Choose it now!